பயங்கரவாதத்திற்கு பாரதம் அடிபணியாது; உயிரிழந்தவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அமித்ஷா உறுதி

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து தாக்குதல் நடந்த பஹல்காம் பகுதியை நேரில் அவர் ஆய்வு செய்தார். பயங்கரவாதத்திற்கு பாரதம் அடிபணியாது என அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் சுற்றுலா தலத்தில், ராணுவ சீருடையில் வந்த பயங்கரவாதிகள், நேற்று நடத்திய தாக்குதலில், வெளிநாட்டவர் இருவர் உட்பட, 26 சுற்றுலா பயணியர் உயிரிழந்தனர். சவுதி அரேபியா சென்ற பிரதமர் மோடி அவசரமாக நாடு திரும்பினார்.
பயங்கரவாதிகளுக்கு தக்க பதலடி கொடுக்க முக்கிய ஆலோசனை நடந்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள, அமித்ஷா பாதுகாப்பு படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தற்போது பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சின்னாறு எல்லை பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில், பயங்கரவாதிகள் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், காஷ்மீரில் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்களுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பிறகு குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அமித்ஷா கூறியதாவது: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு கனத்த இதயத்துடன் இறுதி மரியாதை செலுத்தினேன்.
பயங்கரவாதத்திற்கு பாரதம் அடிபணியாது. இந்த கொடூரமான தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தப்பிக்க விடமாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.












மேலும்
-
சுற்றுலாப் பயணிகள் 40 பேரை மீட்க சிறப்பு விமானம்: கர்நாடகா முதல்வர்
-
காஷ்மீர் தாக்குதல் பின்னணியில் லஷ்கர் இ தொய்பா அமைப்பு; உளவுத்துறை தகவல்
-
ஆபாச அமைச்சர் பொன்முடியின் பேச்சு: தாமாக முன்வந்து வழக்குப் பதிய உயர்நீதிமன்றம் உத்தரவு
-
நாட்டையே உலுக்கிய பஹல்காம் தாக்குதல்; பலியான 26 பேரின் பெயர்கள், ஊர் முழு பட்டியல் இதோ!
-
அரசுடன் அதிகார மோதல் இல்லை; கவர்னர் மாளிகை தகவல்
-
பிரதமர் மோடியின் உ.பி., பயணமும் ரத்து