அமைச்சர் ஆகிறாரா அண்ணாமலை?

சென்னை: தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி:
பாகிஸ்தான் பயங்கரவாதிகள், இந்தியாவின் அமைதியை சீர்குலைக்க வேண்டும் என, தொடர்ந்து தாக்குதல் நடத்துகின்றனர்.
மக்கள் அனைவரும் இந்த நேரத்தில் ஒற்றுமையாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டும். பஹல்காம் சம்பவத்துக்கு அரசு நிச்சயம் பதிலடி தரும். இதில் அரசியல் பேசுவதை தவிர்க்க வேண்டும்.
சுற்றுலா சென்றவர்களை வரிசையில் நிறுத்தி, முஸ்லிமா, ஹிந்துவா எனக் கேட்டு, அதன்பின் ஹிந்துக்களை மட்டும் பயங்கரவாதிகள் சுட்டதாக, பாதிக்கப்பட்டோர் பேட்டி கொடுத்து உள்ளனர்.
ஆனால், தாக்குதலுக்குப் பின், காயமடைந்தவர்களை காப்பாற்ற முதலில் வந்தவர்கள் முஸ்லிம்கள் தான். அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நம் நாட்டில் முஸ்லிம்கள், ஹிந்துக்கள் அனைவரும் சமம் தான். ஆனால், பயங்கரவாதிகளின் மனநிலை அப்படி இல்லை.
நான் உள்துறை இணை அமைச்சர் ஆகப் போவதாக செய்தி பரப்புகின்றனர். இன்று வரை உங்களோடு தான் நான் இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.


மேலும்
-
சொத்து குவிப்பு வழக்கு: அமைச்சர் துரைமுருகனுக்கு அடுத்த சிக்கல்!
-
பாகிஸ்தான் துாதரகத்துக்குள் கொண்டு செல்லப்பட்ட கேக்; உச்ச கட்ட கோபத்தில் இந்தியா!
-
கருணாநிதி பெயரில் புதிய பல்கலை; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
-
டில்லியில் பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பு வாபஸ்; அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கை
-
பாக்., அரசின் எக்ஸ் தளப்பக்கம் இந்தியாவில் முடக்கம்
-
பயங்கரவாதிகளை ஆதரிக்கும் படுபாதக பாகிஸ்தான் மீது என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம்?: இங்கு எழுதுங்கள் வாசகர்களே...