பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை: முகேஷ் அம்பானி அறிவிப்பு

11


புதுடில்லி: பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தொழிலதிபர் முகேஷ் அம்பானி இரங்கல் தெரிவித்தார். மேலும், அவர் ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையில் காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என அறிவித்தார்.


இது குறித்து முகேஷ் அம்பானி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பஹல்காமில் நடந்த காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி இந்தியர்கள் இறந்ததற்கு நாடே துக்கத்தில் இருக்கிறது. துக்கத்தில் நானும் இணைகிறேன்.


உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய வேண்டும். மும்பையில் உள்ள எங்கள் ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையில் காயமடைந்த அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்படும்.

பயங்கரவாதம் மனிதகுலத்தின் எதிரி. இதை யாரும் எந்த வகையிலும் ஆதரிக்கக்கூடாது. பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிரான போரில், பிரதமர் மோடி, மத்திய அரசு மற்றும் நாட்டு மக்கள் அனைவருக்கும் நாங்கள் ஆதரவாக இருப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement