பறித்த இருவர் கைது

ஈரோடு:

அவல்பூந்துறை, எரப்பம்பாளையத்தை சேர்ந்தவர் இந்திரா, 62; அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். கடந்த, 21ம் தேதி மதியம், 30 வயது மதிக்கத்தக்க வாலிபர், சிகரெட் கேட்பது போல் நடித்து, இந்திராவை கட்டையால் தாக்கி, ஐந்தரை பவுன் தங்கச்சங்கிலியை பறித்தார்.


அதே பகுதியில் டூவீலருடன் ஒரு வாலிபர் நின்றிருக்க, அந்த பைக்கில் ஏறி தப்பினார். இது தொடர்பான புகாரின்படி விசாரித்த அறச்சலுார் போலீசார், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நவநீதன், 34; ஈரோடு, ஆர்.என்.புதுாரை சேர்ந்த கலைசெல்வன், 32, ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.

Advertisement