மருத்துவhttps://admin.dinamalar.com/newsadd_xml2.php?MID=102&xmlid=2170131மனையில் இருந்து குதித்து மேற்குவங்க வாலிபர் தற்கொலை

திருப்பூர்:ரயிலில் இருந்து விழுந்து காயமடைந்து சிகிச்சையில் இருந்த, மேற்குவங்க வாலிபர், திருப்பூர் அரசு மருத்துவமனை மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார்.

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் விபாஸ் பன்வான், 30. திருவனந்தபுரத்தில் உள்ள சகோதரரை பார்க்க, அசாமில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டார். நேற்று முன்தினம் திருப்பூரை நோக்கி வரும் போது, கூலிபாளையம் அருகே ரயிலில் படிக்கட்டில் அமர்ந்திருந்த அவர் எதிர்பாராத விதமாக கீழே விழுந்து காயமடைந்தார்.

அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். திருப்பூர் ரயில்வே போலீசார் விசாரித்தனர். காலில் காயமடைந்த அவர் புகார் கொடுக்க முன்வரவில்லை. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அவர் திடீரென காணவில்லை. போலீசார் அவரை தேடி கொண்டிருந்தனர்.

நேற்று முன்தினம் இரவு, 8:30 மணியளவில் நான்காவது தளத்தில் இருந்து கீழே விழுந்து விபாஸ் பன்வான் இறந்தார்.

'சிசிடிவி' பதிவுகளை ஆய்வு செய்தபோது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் வெளியே வரும் காட்சி பதிவாகியுள்ளது. பின், எந்த வழியாக மாடிக்கு சென்றார் என்பது தெரியவில்லை.

மாடியில் இருந்து எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என திருப்பூர் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement