என்.எல்.சி., தேர்தலில் தொ.மு.ச.,விற்கு ஓட்டளிக்க முதல்வர் வேண்டுகோள்
நெய்வேலி :என்.எல்.சி., தேர்தலில் தொ.மு.ச., வுக்கு ஓட்டளிக்க வேண்டுமென, தமிழக முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவரது அறிக்கை:
என்.எல்.சி.,யில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்திற்கான ரகசிய ஓட்டெடுப்பு இன்று நடக்கிறது. மத்திய அரசு என்.எல்.சி., பங்குகளை விற்றுத் தனியார்மயத்தைப் புகுத்த முயற்சித்த நேரத்தில், தி.மு.க.,எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாக தடுக்கப்பட்டன. கடந்த தேர்தல்களில் பெரும்பான்மையான தொழிலாளர்களின் ஓட்டுகளோடு தொ.மு.ச., முதன்மை சங்கமாக தேர்ந்தெடுத்து பல்வேறு பணிகளைச் செய்துள்ளது.
குறிப்பாக, கொரோனாவால் உயிரிழந்த குடும்பங்களின் 124 வாரிசுகளுக்கு வேலை பெற்றுக் தந்தது. ஒப்பந்த தொழிலாளர்களாகப் பணியாற்றிய 3,154 தொழிலாளர்களை சொசைட்டி தொழிலாளர்களாகவும், சொசைட்டி தொழிலாளர்களாக இருந்த 2,173 பேரை நிரந்தரத் தொழிலாளர்களாக நியமனம் செய்ய வைத்துள்ளோம்.
வரும் 2027ல் நடைபெற உள்ள ஊதிய மாற்று ஒப்பந்தத்தில் முக்கியக் கோரிக்கைகளை வென்றெடுக்க தொ.மு.ச., ரகசிய ஓட்டெடுப்பில் தனிப்பெரும் சங்கமாக வர வேண்டியது கட்டாயம். எனவே, தொ.மு.ச.,வை வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் சத்ய சாய்பாபா ஆராதனை மஹோத்சவம்
-
வார்த்தை வலையில் சிக்கிய தி.மு.க., அரசு!
-
டில்லி பாக்., துாதரகம் முன் கொந்தளித்த பொதுமக்கள்!
-
சிந்து நதி நீர் நிறுத்தம்; சந்திக்கப் போகும் சவால்கள்!
-
பாகிஸ்தானுக்கு பதிலடி; இந்தியாவுக்கான வாய்ப்புகள் என்ன?
-
கைத்தறி நெசவு தொழில் பாதுகாக்கப்படுமா?