செந்தில்குமார் எம்.எல்.ஏ., குறித்து அவதுாறு தி.மு.க.,வினர் சைபர் கிரைம் போலீசில் புகார்

பாகூர்: செந்தில்குமார் எம்.எல்.ஏ., குறித்து, அவதூறு பரப்பி வருவோர் மீது நடவடிக்கை எடுக்ககோரி, தி.மு.க.,வினர், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து தி.மு.க., விவசாய தொழிலாளர் அணி மாநில அமைப்பாளர் தவமுருகன், சைபர் கிரைம் போலீசில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது; பாகூர் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில்குமார், அரசியல் பாரபட்சமின்றி, யாருக்கும் எந்த விதமான சங்கடங்களும் ஏற்படாத வகையில், தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருகிறார். குறிப்பாக கொரோனா தோற்று, புயல், மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது, தொகுதி மக்களோடு மக்களாக இரவு பகல் பராமல் ஓய்வின்றி மக்கள் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், ஓல்ட் இஸ் கோல்ட் என்ற சமூக வலைதள குழுவில், செந்தில்குமார் எம்.எல்.ஏ.,வின் புகைப்படத்தை பதிவிட்டு அரசியல், வெறுப்பு, விருப்பு காரணமாக சில விஷமிகள் வேண்டுமென்றே மனக்கசப்பை ஏற்படுத்தும் உள் நோக்கத்தோடு, சாதி வன்மத்தை, சாதி வெறியை துாண்டி, பொது அமைதியை கெடுக்கின்ற வகையில் சமுக வலை தளங்களில் பதிவிட்டுள்ளனர். இதற்கு முன்பும், இரண்டு முறை அவரது படத்தை பதிவிட்டு அவதுாறாக பல செய்திகளை பதிவிட்டு இருந்தனர்.
அமைதியான முறையில் இருந்த பாகூர் தொகுதியில் இந்த பதிவின் மூலமாக சாதிய மோதலும், அரசியல் மோதலும், பொது அமைதியும் கெடுகின்ற சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சமூக வலைதள குழுவில் பதிவிட்டவர், அதனை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
காஷ்மீரில் பயங்கரவாதியின் வீடு வெடிவைத்து தகர்ப்பு; ராணுவத்தினர் அதிரடி
-
புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் சத்ய சாய்பாபா ஆராதனை மஹோத்சவம்
-
வார்த்தை வலையில் சிக்கிய தி.மு.க., அரசு!
-
டில்லி பாக்., துாதரகம் முன் கொந்தளித்த பொதுமக்கள்!
-
சிந்து நதி நீர் நிறுத்தம்; சந்திக்கப் போகும் சவால்கள்!
-
பாகிஸ்தானுக்கு பதிலடி; இந்தியாவுக்கான வாய்ப்புகள் என்ன?