காஷ்மீரில் பயங்கரவாதியின் வீடு வெடிவைத்து தகர்ப்பு; ராணுவத்தினர் அதிரடி

23


ஸ்ரீநகர்: காஷ்மீர் எல்லைக் கோட்டுப்பகுதியில் ஒரு சில இடங்களில், பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. அவர்களுக்கு இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்தனர். காஷ்மீரை சேர்ந்த பயங்கரவாதிகள் அடில் மற்றும் ஆசிப்பின் வீடுகளை வெடி வைத்து இந்திய ராணுவம் தகர்த்தது.



காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் ஜம்மு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் இராணுவத்தினர் இன்று காலை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
Latest Tamil News


இதற்கிடையே, காஷ்மீரில் பயங்கரவாதி வீட்டை இந்திய ராணுவம் தரைமட்டமாக்கியது. காஷ்மீரை சேர்ந்த பயங்கரவாதிகள் அடில் மற்றும் ஆசிப்பின் வீடுகளை வெடி வைத்து இந்திய ராணுவம் தகர்த்தது. இந்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 2 வீரர்கள் காயம் அடைந்தனர்.

Advertisement