பெற்றோரை இழந்த மாணவருக்கு உதவித்தொகை உயர்நீதிமன்றத்தில் தகவல்
மதுரை : பெற்றோரை இழந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஒரு பள்ளி மாணவனுக்கு நிவாரணம் கோரியதில்,'ரூ.26 ஆயிரம் வங்கியில் 'டிபாசிட்' செய்யப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டிலிருந்து 'மிஷன் வட்சல்யா' திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கப்படும்,' என தமிழக அரசு தரப்பு தெரிவித்ததை பதிவு செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கை பைசல் செய்தது.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த மனு:
நான் 70 வயது மூத்த குடிமகன். எனது மகளுக்கு ஒருவருடன் திருமணம் நடந்தது. அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. கருத்து வேறுபாடு காரணமாக எனது மகள் கணவரை விவாகரத்து செய்து எங்கள் வீட்டிற்குத் திரும்பினார். அவர் கொரோனா காலகட்டத்தில் இறந்தார். எனது பேரனுக்கு பெற்றோர் இல்லை. அவர் எனது நண்பரின் வீட்டில் தங்கி, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கிறார்.
பெற்றோர் இல்லாத குழந்தைக்கு அரசால் அனுமதிக்கப்படும் ரூ.26 ஆயிரம் நிவாரணத் தொகையை வழங்க வலியுறுத்தி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு மனு அனுப்பினேன். அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி வி.லட்சுமிநாராயணன் விசாரித்தார்.
அரசு தரப்பு: சிறுவனின் வங்கி கணக்கில் ரூ.26 ஆயிரம் 'டிபாசிட்' செய்யப்பட்டுள்ளது. சிறுவன் வேறு மாவட்டமான திண்டுக்கல்லிற்கு சென்றதால் நிதி உதவி திட்டத்தில் அவரது பெயர் நீக்கம் செய்யப்பட்டது. தற்போது சொந்த மாவட்டமான சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு பள்ளியில் 8 வது வகுப்பு படிக்கிறார். அடுத்த கல்வியாண்டிலிருந்து 'மிஷன் வட்சல்யா' திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கப்படும். இவ்வாறு கடிதம் சமர்ப்பித்தது. இதை பதிவு செய்த நீதிபதி,'மேலும் உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை. வழக்கு பைசல் செய்யப்படுகிறது,' என உத்தரவிட்டார்.
மேலும்
-
கனடாவில் பயங்கரவாத தாக்குதல்; இசை விழாவில் அதிவேக கார் புகுந்ததில் பலர் பலி
-
டில்லியில் 5 ஆயிரம் பாகிஸ்தானியர்கள்; அடையாளம் கண்டது உளவுத்துறை!
-
விவசாயிகள் தொழில் முனைவோராக மாறணும்; கோவையில் துணை ஜனாதிபதி பேச்சு
-
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும்: நயினார் நாகேந்திரன் பேட்டி
-
ஒரு நிமிடத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் பாலைவனமாவதாக ஐ.நா எச்சரிக்கை
-
யார் முகத்தில முழிச்சேனோ?