தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும்: நயினார் நாகேந்திரன் பேட்டி

சென்னை: ''ஆட்சி உங்களுக்கு நிரந்தரமானது மட்டும் அல்ல. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும்'' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்ய கடந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தற்போது ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது. துணை முதல்வர் தொகுதி என்பதால் அனுமதி மறுக்கப்பட்டதா?
மக்கள் மனதில் மாற்றம் நிகழ்ந்து இருக்கிறது. முறையாக அனுமதி கேட்டு ஒரு வாரம் ஆகிறது.ஆட்சி உங்களுக்கு நிரந்தரமானது மட்டும் அல்ல. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும். பா.ஜ.,வின் வளர்ச்சியை தடுக்க பார்க்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
நிருபர்: திருமாவளவன் அ.தி.மு.க., விஜய் உடன் கூட்டணி கதவை மூடிவிட்டோம். அ.தி.மு.க., கூட்டணி ஆட்சிக்கு அழைத்தார்கள்? என கூறியுள்ளாரே?
நயினார் நாகேந்திரன் பதில்: திருமாவளவன் ஒரு கூட்டணியில் இருக்கிறார். இவர் எப்படி அ.தி.மு.க., கதவை மூடமுடியும். விஜய் கதவை மூடிவிட்டோம் என்று எப்படி சொல்ல முடியும். முதலில் அவரது வீட்டு டோரை குளோஸ் பண்ணட்டும். அடுத்த வீட்டை பற்றி அவர் கவலைப்பட வேண்டாம்.











மேலும்
-
65 ஆண்டு கால பழமையான வெடிகுண்டை அழித்தது இந்திய ராணுவம்
-
பாக்., செல்ல முயன்ற இந்தியப் பெண்: அட்டாரி - வாகா எல்லையில் தடுத்து நிறுத்தம்
-
இந்தியா - பாக்., இடையே பதற்றம்: உன்னிப்பாக கவனிக்கறது சீனா
-
நம்பிக்கை மற்றும் தைரியத்துடன் பஹல்காமுக்கு வரும் சுற்றுலா பயணிகள்
-
பாகிஸ்தானியர்களுக்கு 3 ஆண்டு சிறை, ரூ.3 லட்சம் அபராதம் விதிக்க வாய்ப்பு
-
அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக ஆண்டு விழா