விவசாயிகள் தொழில் முனைவோராக மாறணும்; கோவையில் துணை ஜனாதிபதி பேச்சு

1

கோவை: ''விவசாயிகள் உற்பத்தி, மதிப்பு கூட்டு உற்பத்தியை தாண்டி தொழில் முனைவோராக மாற வேண்டும்'' என துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பேசினார்.


கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவல் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: தமிழ்நாடு வேளாண் பல்கலை நாட்டின் உணவு தேவைக்கு மிகுந்த பங்களிப்பை வழங்குகிறது. நாட்டின் பெருமைமிகு நபர்கள் இந்த பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள்.


30 டிரில்லியன் பொருளாதாரத்தை 2047ம் ஆண்டு எட்டுவோம். விவசாயிகள் உற்பத்தி, மதிப்பு கூட்டு உற்பத்தியை தாண்டி தொழில் முனைவோராக மாற வேண்டும். பிரதமர் மோடியின் முயற்சியால் பல்வேறு துறைகளில் முன்னேறிவிட்டோம். இவ்வாறு ஜக்தீப் தன்கர் பேசினார்.

Advertisement