கிறிஸ்ட் பொறியியல் கல்லுாரி ஆண்டு விழா

புதுச்சேரி :மூலக்குளத்தில் இயங்கி வரும் கிறிஸ்ட் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 19ம் ஆண்டு விழா கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
கல்லுாரி முதல்வர் சிவக்குமார் வரவேற்றார். சாம் பால் கல்வி அறக்கட்டளைக் குழுமத்தின் மேலாண் இயக்குநர் சாம் பால் தலைமை தாங்கி, கல்லுாரி ஆண்டு இதழினை வெளியிட, சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ், பலகுரல் கலைஞர் சதிஷ், பின்னணிப் பாடகி ஸ்ரீநிஷா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
விழாவில், மேலாண் இயக்குனர் சாம்பால் பேசுகையில், 'மாணவர்களைப் பொறுப்புள்ள குடிமக்களாக மாற்றுவதற்கான நெறிமுறைகளை கல்லுாரி நிர்வாகம் கற்றுக் கொடுத்து வருகிறது' என்றார்.
விழாவில் 2023--24ம் கல்வியாண்டில் சிறப்பாக பயின்று பல்கலைக் கழக அளவிலும், கல்லுாரி அளவிலும் சிறந்த இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கும், சிறப்பாக பணிபுரிந்து அதிக தேர்ச்சி சதவீதம் அளித்த பேராசிரியர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பல்வேறு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
கல்லுாரி இயக்குநர் குமரவேல், தலைமை நிர்வாக அதிகாரி சுப்ரமணியம், சாம்பால் கல்வி அறக்கட்டளைக் குழும அனைத்து கல்லுாரி முதல்வர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
கனடாவில் பயங்கரவாத தாக்குதல்; இசை விழாவில் அதிவேக கார் புகுந்ததில் பலர் பலி
-
டில்லியில் 5 ஆயிரம் பாகிஸ்தானியர்கள்; அடையாளம் கண்டது உளவுத்துறை!
-
விவசாயிகள் தொழில் முனைவோராக மாறணும்; கோவையில் துணை ஜனாதிபதி பேச்சு
-
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும்: நயினார் நாகேந்திரன் பேட்டி
-
ஒரு நிமிடத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் பாலைவனமாவதாக ஐ.நா எச்சரிக்கை
-
யார் முகத்தில முழிச்சேனோ?