விசைப்படகு போக்குவரத்து நிறுத்தம்

இடைப்பாடி: மேட்டூர் அணையில் திறந்து விடப்படும் நீர், காவிரி ஆற்றில் செல்கிறது. நெருஞ்சிப்பேட்டை, பூலாம்பட்டி காவிரியாற்றில் தேக்கப்
பட்டுள்ள தண்ணீர் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அதற்கு தேக்கப்படும் நீர், ஷட்டர்கள் மூலம் அடைத்து வைக்கப்பட்டுள்-ளது. இந்நிலையில் நெருஞ்சிப்பேட்டை நீர் மின் நிலையத்தில் தண்ணீர் தேக்க பயன்படுத்தப்படும் கதவணை ஷட்டரை பராம-ரிக்க, தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர், நேற்று திறந்து விடப்-பட்டது. அடுத்த மாதம், 12 வரை ஷட்டர் பராமரிப்பு பணி நடக்கும். அதற்கு பின், தண்ணீர் தேக்கப்படும்.
இதனால் காவிரி ஆற்றின் குறுக்கே சேலம் மாவட்டம் பூலாம்பட்-டியில் இருந்து ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டைக்கு இயக்-கப்படும் விசைப்படகு போக்குவரத்து, அடுத்த, 17 நாட்களுக்கு இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விசைப்ப-டகில் பயணிக்க வந்த மக்கள் ஏமாற்றம் அடைந்து, 6 கி.மீ.,
சுற்றிச்சென்றனர்.

Advertisement