துணை தேடிய 60 வயது பெண் ஏமாற்றிய இளசு சிறையிலடைப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் நசியனுார், ராயர்பாளையத்தை சேர்ந்த, கணவனை இழந்து தனியே வசிக்கும், 60 வயது பெண், தனக்கு ஆண் துணை தேவை என்று, திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார். இதைப்பார்த்த திண்-டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த விஸ்வாசகுமார் மகன் மனோஜ்குமார், 29, விண்ணப்பித்துள்ளார். இருவரும் சில தினங்கள் பேசி, பழகியுள்ளனர். இச்சூழலை பயன்படுத்தி பெண்-ணிடம் இருந்த, நான்கு பவுன் தங்கச்சங்கிலியை எடுத்துக் கொண்டு தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து பெண்ணின் புகார்படி, சித்தோடு போலீசார் விசாரித்து வந்த நிலையில், மனோஜ்
குமாரை கைது செய்தனர்.
திருமண தகவல் மைய வலைதளத்தில், கணவனால் கைவிடப்-பட்டு துணை தேடும் பெண்களை குறிவைத்து பணம், நகையை திருடி செல்வதை, மனோஜ்குமார் வழக்கமாக கொண்டவர். பல பெண்களை ஏமாற்றி நகை, பணம் திருடியது தொடர்பாக, மனோஜ்குமார் மீது நான்கு வழக்குகள் தமிழகத்தின் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் உள்ளன. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோபியில் உள்ள மாவட்ட சிறையில், அவரை அடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement