யுனெஸ்கோ அங்கீகரித்த உலக நினைவகம் புதுச்சேரியில் இருப்பது தெரியுமா?

புதுச்சேரி 280 ஆண்டுகள்பிரெஞ்சியர் ஆட்சியின் கீழ் இருந்தது என்பது வரலாறு. அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டபோது, இந்தப் பகுதியின் மீதான நீடித்த அக்கறையை வெளிப்படுத்தும் விதமாக, பிரெஞ்சு அரசு ஓர் ஆய்வு நிறுவனத்தை முன்மொழிந்தது.
கடந்த 1947ல் முதன் முறையாக உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடந்தபோது, அவர்கள் வைத்த முக்கிய கோரிக்கை ஒரு உயர்கல்வி நிறுவனத்தை புதுச்சேரியில் நிறுவவேண்டும் என்பதே. பிரதமர் நேரு அதை ஏற்றுக்கொண்டார்.
அதன்படி, பிரெஞ்சு கலாசாரத்தையும், பண்பாட்டுக் கூறுகளையும், இந்திய நாகரீகம், பண்பாடு பற்றியும் ஆராய்வதற்காக கடந்த 1955 மார்ச் 20ம் தேதி இந்தியா - பிரான்சு அரசுகளுக்கிடையே ஏற்பட்ட இணைப்பு ஒப்பந்தம் - 1954, விதி 24-இன் படி, பிரெஞ்சு ஆராய்ச்சி நிறுவனம், தொடங்கப்பட்டது.
அறிஞர் ழான் பிலியோசா இதன் முதல் இயக்குனர்.அதற்கு 70 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
1960ல் சூழலியல் பிரிவு, 1988ல் சமூக அறிவியல் பிரிவு,1990ல்புவிப்பரப்பு கணிப்பியல் பிரிவும் துவங்கப்பட்டன. அண்மையில், செம்மொழியாம் தமிழ் பற்றிய ஆய்வுகளையும் துவக்கியுள்ளது. இதன் நுாலகத்தில், 380 ஆராய்ச்சித் தொகுப்புகள், 440 ஆய்வறிக்கைகள், 144 சஞ்சிகைகள், 70,000 புத்தகங்கள், பிரெஞ்சியர் காலத்துக் கடிதங்கள், நுால்கள், அரசுக் குறிப்புகள் கிடைப்பதால், இந்திய, அந்நிய வரலாற்று ஆய்வாளர்களுக்கு இது ஒரு தகவல் களஞ்சியமாகத் திகழ்கிறது.
ஓலைச்சுவடி, ஒளிப்படக் களஞ்சியம்இந்திய வரலாறு, சமயங்கள், நாகரிகம் பற்றிய ஆய்வுகளின் விளைவாக ஓர் ஓலைச்சுவடிக் களஞ்சியம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில், சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, மலையாளம், துளு, ஆகிய மொழிகளில் 8,187 ஓலைச்சுவடிகளும், 1,144 ஓலைச்சுவடிப் பிரதிகளும் சேகரிக்கப்பட்டு, ஓலைச்சுவடிகளுக்கானஆதார மையமாக திகழ்கிறது.
ஒளிப்பட ஆவணக் கருவூலத்தில், சிவன், விஷ்ணு, பிரம்மா, கிராமியத் தெய்வங்கள், ராமாயணம், மகாபாரதம், பாரம்பரியக் கட்டுமானங்கள், நினைவுச் சின்னங்கள், அரண்மனைகள், பவுத்தம், சமணம், அவை தொடர்பான சிற்பங்கள், தென்னக ஆலயங்களின் உலோகச் சிலைகள், ஓவியங்கள், மரச்சிற்பங்கள், கோவில்கள், கோபுரங்கள், கற்காலப் பாறை ஓவியங்கள், பழங்கால அணிகலன்கள், தந்தத்தாலானகலை வடிவங்கள் போன்றவை 1,60,000 ஒளிப்படங்களாகக்குவிக்கப்பட்டுள்ளதால், கடந்த 2005ம் ஆண்டு யுனெஸ்கோஇதை'ஓர் உலக நினைவகம்' என, அங்கீகரித்துள்ளது.
-பேராசிரியர் ராமானுசம்
மேலும்
-
கனடாவில் பயங்கரவாத தாக்குதல்; இசை விழாவில் அதிவேக கார் புகுந்ததில் பலர் பலி
-
டில்லியில் 5 ஆயிரம் பாகிஸ்தானியர்கள்; அடையாளம் கண்டது உளவுத்துறை!
-
விவசாயிகள் தொழில் முனைவோராக மாறணும்; கோவையில் துணை ஜனாதிபதி பேச்சு
-
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும்: நயினார் நாகேந்திரன் பேட்டி
-
ஒரு நிமிடத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் பாலைவனமாவதாக ஐ.நா எச்சரிக்கை
-
யார் முகத்தில முழிச்சேனோ?