வாழையடி வாழையாக வந்த பழக்கம் தொடரட்டுமே... இலவசமாக இலை கட்டு கொடுத்து விழிப்புணர்வு

பண்டிகைகள், திருவிழாகள், வீட்டு விஷேசங்களில் விருந்தினர்களுக்கு வாழை இலையில் உணவு பரிமாறுவது தமிழர்களின் பாரம்பரிய பழக்கம். இருந்தாலும், தலைவாழை இலை உணவு பழக்கம் மெல்ல மெல்ல மறைந்து வருகிறது என்பதே நிதர்சனமான உண்மை.
இன்றைய பாஸ்ட்புட் உலகத்தில் எல்லாமே ரெடிமேடு கலாசாரமாக மாறிவிட்டது. தலை வாழை இலை இடத்தை பிளாஸ்டிக் பேக்குகள் பிடித்துவிட்டன. இன்னும் சொல்லப்போனால் தலைவாழை இலையும் பிளாடிக்கில் வந்துவிட்டது.
வீடுகளிலயே இப்படி என்றால், ஓட்டல்களை பற்றி சொல்லவே தேவையில்லை. ஓட்டல், சாலையோர டிபன் கடைகளில்பெரும்பாலும் பிளாஸ்டிக் பேப்பரில் தான் உணவுகளை கட்டி தருகின்றனர். இவை சுற்றுச்சூழலுக்கு கடும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது.
இதனை தடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், புதுச்சேரி தட்டாஞ்சாவடியை சேர்ந்த சமூக ஆர்வலர் கோபி சாலையோர டிபன் கடைகளுக்கு வாழை இலை கட்டுகளை இலவசமாக வழங்கி, பிளாஸ்டிக் பேப்பரால் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துக்கூறி, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இதுகுறித்து கோபி கூறுகையில், 'நம் முன்னோர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தனர். அதனால் தான் வாழை இலையை உணவு பரிமாற பயன்படுத்தினர். வாழை இலையை பயன்படுத்த காரணம் இல்லாமல் இல்லை.
வாழை இலையில் பரிமாறப்படும் உணவு சுவையாக இருக்கும். வாழை இலைகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை. பாத்திரங்களை சுத்தம் செய்வதில் தண்ணீரை வீணாவது குறையும். இப்படி நம் முன்னோர்கள் எதனையும் தொலை நோக்கோடு தான் செய்தனர். அவர்கள் வழியில் நாம் வாழை இலையை டிபன் கடைகளில் பயன்படுத்த வேண்டும்'என்றார்.
மேலும்
-
கனடாவில் பயங்கரவாத தாக்குதல்; இசை விழாவில் அதிவேக கார் புகுந்ததில் பலர் பலி
-
டில்லியில் 5 ஆயிரம் பாகிஸ்தானியர்கள்; அடையாளம் கண்டது உளவுத்துறை!
-
விவசாயிகள் தொழில் முனைவோராக மாறணும்; கோவையில் துணை ஜனாதிபதி பேச்சு
-
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும்: நயினார் நாகேந்திரன் பேட்டி
-
ஒரு நிமிடத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் பாலைவனமாவதாக ஐ.நா எச்சரிக்கை
-
யார் முகத்தில முழிச்சேனோ?