'கொடை' யில் பூத்துக் குலுங்கும் மலர்கள் சுற்றுலா பயணிகள் உற்சாகம்

கொடைக்கானல், ஏப். 27- -
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் மலர்களை சுற்றுலா பயணிகள் ரசித்தனர்.
இப்பூங்காவில் ஆண்டுதோறும் மலர்கண்காட்சி நடக்கும். 62 வது மலர்கண்காட்சிக்காக சில மாதங்களுக்கு முன் ஆப்ரிக்கன் மேரிகோல்டு, ஆஸ்டர், பெக்கோனியா, கேலண்டுல்லா. காஸ்மாஸ் , டெல்பினியம் உள்ளிட்ட 26 வகையான மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டன. சுட்டெரித்த வெயிலுக்கிடையே கோடை மழை குளிர்வித்ததால் செடிகள் நன்கு தளிர்த்தது. தற்போது முழு வீச்சில் பூக்கள் பூக்கத் தொடங்கி உள்ளன. இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் இவற்றை ரசித்து செல்கின்றனர். எதிர்வரும் வாரங்களில் மொத்தமாக மலர்கள் பூத்துக்குலுங்கும். நேற்று மதியம் அரை மணி நேரம் மிதமான மழை பெய்ததில் ரம்யமான சீதோஷ்ண நிலை நீடித்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கனடாவில் பயங்கரவாத தாக்குதல்; இசை விழாவில் அதிவேக கார் புகுந்ததில் பலர் பலி
-
டில்லியில் 5 ஆயிரம் பாகிஸ்தானியர்கள்; அடையாளம் கண்டது உளவுத்துறை!
-
விவசாயிகள் தொழில் முனைவோராக மாறணும்; கோவையில் துணை ஜனாதிபதி பேச்சு
-
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும்: நயினார் நாகேந்திரன் பேட்டி
-
ஒரு நிமிடத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் பாலைவனமாவதாக ஐ.நா எச்சரிக்கை
-
யார் முகத்தில முழிச்சேனோ?
Advertisement
Advertisement