டிராக்டர் கவிழ்ந்து இருவர் பலி

ஹாவேரி : ஹாவேரி மாவட்டம், ராணிபென்னுாரின் கோடிஹால் கிராமத்தை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டோர், ஹரிஹராவில் உள்ள உறவினர் குழந்தையின் பெயர் சூட்டு விழாவுக்கு டிராக்டரில் சென்று கொண்டிருந்தனர்.

நித்துார் கிராஸ் அருகே சென்றபோது, டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில், டிராக்டரில் இருந்த அசோக் சித்தப்பா மகனுார், 56, ஜெகதீஷ் சித்தப்பா, 50, ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தவர்களை, அப்பகுதியினர் ராணிபென்னுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஹலகேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். டிராக்டரில் இருந்த இணைப்பு துண்டாகி கவிழ்ந்தது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்தை கேட்டு, பெயர் சூட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement