மூளைச்சாவு: உறுப்புதானம்

மதுரை : மதுரை மாவட்டம் பேரையூரை சேர்ந்தவர் கோச்சடை முத்தையா 47. இவர் டூவீலரில் காரைக்கேணி அருகே சென்றபோது விபத்தில் தலைக்காயம் ஏற்பட்டது.

மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் மூளைச்சாவு அடைந்தார். உடலுறுப்பு தானம் செய்ய மனைவி நிர்மலா ஒப்புதல் அளித்தார். சிறுகுடல் சென்னை எம்.ஜி.எம்.,மருத்துவமனை, கல்லீரல் மதுரை வடமலையான் மருத்துவமனை, ஒரு சிறுநீரகம், கருவிழிகள் மதுரை அரசு மருத்துவமனை, மற்றொரு சிறுநீரகத்தை திருச்சி சுந்தரம் மருத்துவமனை நிர்வாகங்கள் தானமாக பெற்றுக் கொண்டன.

இதனால் 6 பேர் பயனடைந்துள்ளனர். கோச்சடை முத்தையாவிற்கு தமிழக அரசு சார்பில் இறுதி மரியாதை செய்வதற்காக மாவட்ட நிர்வாகம் மூலம் உடல் அனுப்பி வைக்கப்பட்டது என மதுரை அரசு மருத்துவமனை டீன் அருள் சுந்தரேஷ் குமார் தெரிவித்தார்.

Advertisement