வாழ்வாதாரம் அளிக்கும் கரி மூட்டம் தொழிலில்.. ஆர்வம்; கோடையில் விவசாயிகளுக்கு வருமானம் தருகிறது

ஆர்.எஸ்.மங்கலம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆர்.எஸ்.மங்கலம், முதுகுளத்துார், கமுதி, கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கோடை காலத்தில் விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் கரிமூட்டம் தொழிலில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
மாவட்டத்தில் நெல் அறுவடை பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து குறைந்த அளவிலான கோடை விவசாயமே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் விவசாயப் பணிகள் இன்றியும், வருவாய் இன்றியும் பாதிப்படைந்துள்ளனர்.
இந்நிலையில் விவசாயப் பணிக்கு மாற்றாக கோடையில் சீமைக்கருவேல மரம் விறகு வெட்டும் தொழிலில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். தங்களது பட்டா இடங்களில் உள்ள சீமைக்கருவேல மரம் விறகுகளை வெட்டி நேரடியாக விறகுகளாகவும், கரிமூட்டத் தொழில் மூலம் விறகுகளை கரிகளாக்கியும் விற்பனை செய்வதில் விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் சீமைக்கருவேல மரம் விறகுகள் ஒரு டன் ரூ.3000 முதல் 3500 வரை நேரடியாக விற்பனை செய்யப்படுகிறது. பெரிய வகை விறகுகள் கரிமூட்ட தொழில் மூலம் கரிகளாக்கி விற்பனை செய்யப்படுகின்றன.
கரி மூட்டத்தில் கரிகள் டன் ரூ.13,000 முதல் ரூ.14,000 வரை தற்போது விற்பனை ஆகிறது. இது கடந்த ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில் டன்னுக்கு ரூ.4000 வரை விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் நேரடியாக விறகுகளாக விற்பனை செய்வதை விட கரிமூட்டம் விற்பனை செய்வதில் கூடுதல் லாபம் கிடைப்பதால் கரி மூட்ட தொழிலில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
மேலும் கரி மூட்ட தொழிலாளர்கள் பயனடையும் வகையில், கரிமூட்ட தொழிலாளர்களுக்கு போதிய விலை கிடைப்பதுடன், ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
--
மேலும்
-
கனடாவில் பயங்கரவாத தாக்குதல்; இசை விழாவில் அதிவேக கார் புகுந்ததில் பலர் பலி
-
டில்லியில் 5 ஆயிரம் பாகிஸ்தானியர்கள்; அடையாளம் கண்டது உளவுத்துறை!
-
விவசாயிகள் தொழில் முனைவோராக மாறணும்; கோவையில் துணை ஜனாதிபதி பேச்சு
-
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும்: நயினார் நாகேந்திரன் பேட்டி
-
ஒரு நிமிடத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் பாலைவனமாவதாக ஐ.நா எச்சரிக்கை
-
யார் முகத்தில முழிச்சேனோ?