விழிப்புணர்வு முகாம்

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் நகராட்சி சார்பில், பஸ் நிலையத்தில் மஞ்சப்பை விழிப்புணர்வு முகாம் நடந்தது.

இதில், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் மீண்டும் மஞ்சப்பைக்கு மாற வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது. நகராட்சி ஆணையர் திவ்யா தலைமை தாங்கினார்.

பொதுமக்கள் மற்றும் வணிக வளாக உரிமையாளர்களிடம் துண்டு பிரசுரம் மற்றும் மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நகராட்சி ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement