மணலுாரில் பகுதி நேர ரேஷன் கடை சட்டசபையில் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

நெய்வேலி : என்.எல்.சி., ரகசிய ஓட்டெடுப்பில் தொ.மு.ச., முதன்மை சங்கமாக வெற்றி பெறுவதற்கு வழிகாட்டிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பதாக சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., கூறினார்.

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது, அவர் பேசியதாவது: நெய்வேலி தொகுதி விசூர் ஊராட்சியில் மணலுார் காலனி மக்கள் 5.கி.மீ., துாரம் சென்று, ரெட்டிபாளையம் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க வேண்டிய நிலை உள்ளது.

எனவே, விசூர் ஊராட்சியில் பகுதி நேர ரேஷன் அமைக்க வேண்டும். கீழ்மாம்பட்டு ஊராட்சி, முத்தரசன்குப்பம் கிராமத்தில் முழு நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும். என்.எல்.சி., ரகசிய ஓட்டெடுப்பில் தொ.மு.ச., முதன்மை சங்கமாக வெற்றி பெறுவதற்கு வழிகாட்டிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

சிலம்பிநாதன்பேட்டை ஊராட்சியில் முதல்வரின் நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக 2 பேர் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

இதற்கு அமைச்சர் பெரியகருப்பன் பதிலளித்து பேசுகையில், 'மணலுார் காலனியில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Advertisement