சுருளி அருவியில் தடுப்பணை அமைத்து குடிநீர் வினியோகிக்க கோரிக்கை
கம்பம் சுருளி அருவியிலிருந்து வெளியேறும் தண்ணீரை தேக்கி, கம்பம் பகுதி கிராமங்களுக்கு மாசுபடாத குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க குடிநீர் வாரியம் முன்வர வேண்டும் என ஊராட்சி நிர்வாகங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள நகரங்களுக்கு லோயர் கேம்பில் முல்லைப் பெரியாற்றில் பம்பிங் செய்து குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. ஊராட்சிகளுக்கு முல்லைப் பெரியாற்றில் ஆங்காங்கே உறைகிணறு அமைத்தும் குடிநீர் விநியோகம் செய்கின்றனர்.
சுருளி அருவியில் ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, இரங்கலாறு அணைகளில் சேகரமாகும் தண்ணீர் மழை காலங்களில் வீணாகி வருகிறது. ஆண்டிற்கு 500 மி.கன அடி தண்ணீர் சுருளி அருவி வழியாக வந்து முல்லைப் பெரியாற்றில் கலக்கிறது.
சுருளி அருவிக்கு அருகே தடுப்பணை கட்டி, குடிநீர் பம்பிங் செய்து, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கம்பம் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சப்ளை செய்யலாம். இதன்மூலம் கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள கிராமங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும். குடிநீர் தட்டுப்பாடும் நீங்கும்.
மேலும் மாசுபடாத குடிநீர் கிடைக்கும், கோடை காலங்களில் மட்டும் அருவியில் தண்ணீர் விழாது. ஆண்டிற்கு 9 மாதங்கள் தண்ணீர் கிடைக்கும். வெள்ளம் பெருக்கெடுத்து ஒடும் மழைகாலங்களில் தண்ணீரை தேக்கி வைத்து பயன்படுத்தலாம். குடிநீர் வடிகால் வாரியம் இந்த திட்டம் குறித்த ஆய்வு செய்ய வேண்டும் என்று இப்பகுதி ஊராட்சி நிர்வாகங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. லோயர் கேம்பிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வழங்கினாலும், தேவைக்கேற்ப வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. எனவே சுருளி அருவியில் இருந்து முல்லைப்பெரியாற்றில் கலக்கும் தண்ணீரை தேக்கி, சுத்திகரித்து வழங்க வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
கனடாவில் பயங்கரவாத தாக்குதல்; இசை விழாவில் அதிவேக கார் புகுந்ததில் பலர் பலி
-
டில்லியில் 5 ஆயிரம் பாகிஸ்தானியர்கள்; அடையாளம் கண்டது உளவுத்துறை!
-
விவசாயிகள் தொழில் முனைவோராக மாறணும்; கோவையில் துணை ஜனாதிபதி பேச்சு
-
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும்: நயினார் நாகேந்திரன் பேட்டி
-
ஒரு நிமிடத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் பாலைவனமாவதாக ஐ.நா எச்சரிக்கை
-
யார் முகத்தில முழிச்சேனோ?