வாகனம் மோதி மாணவர் பலி
வேப்பூர்: பைக்கில் சென்ற பள்ளி மாணவர், அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தார்.
வேப்பூர் அடுத்த அரியநாச்சியைச் சேர்ந்தவர் கருப்புசாமி மகன் ஆகாஷ்,16; இவரது நண்பர் பெரிய நெசலுார் செல்வராஜ் மகன் சஷின்,16; இருவரும் வெவ்வேறு தனியார் பள்ளிகளில் 10ம் வகுப்பு படித்து பொதுத் தேர்வு எழுதியுள்ளனர்.
இருவரும் விருத்தாசலத்தில் உள்ள டைப் ரைட்டிங் பயிற்சிக்கு நேற்று காலை 9:00 மணிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். பைக்கை ஆகாஷ் ஓட்டினார். கண்டபங்குறிச்சி அருகில் வந்த போது, அடையாளம் தெரியாத வாகனம், பைக் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த ஆகாஷ் சம்பவ இடத்திலயே இறந்தார். மேலும், சஷின் வேப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில், வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கனடாவில் பயங்கரவாத தாக்குதல்; இசை விழாவில் அதிவேக கார் புகுந்ததில் பலர் பலி
-
டில்லியில் 5 ஆயிரம் பாகிஸ்தானியர்கள்; அடையாளம் கண்டது உளவுத்துறை!
-
விவசாயிகள் தொழில் முனைவோராக மாறணும்; கோவையில் துணை ஜனாதிபதி பேச்சு
-
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும்: நயினார் நாகேந்திரன் பேட்டி
-
ஒரு நிமிடத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் பாலைவனமாவதாக ஐ.நா எச்சரிக்கை
-
யார் முகத்தில முழிச்சேனோ?
Advertisement
Advertisement