டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர் சங்க தேர்தல்: ஏ.பி.வி.பி., அபார வெற்றி

6

புதுடில்லி: டில்லி ஜவகர்லால் நேரு பல்கலை மாணவர் சங்கத் தேர்தலில், இடதுசாரி சங்கங்களை பின்னுக்குத்தள்ளி ஏ.பி.வி.பி., முன்னிலை பெற்றுள்ளது.


டில்லியில் இருக்கும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் நாட்டின் முதன்மையான கல்வி நிறுவனங்களில் ஒன்று. இங்குள்ள மாணவர் சங்கத்திற்கான வாக்குப்பதிவு ஏப்.25 அன்று நடைபெற்றது, அதில் 70 சதவீத ஓட்டுப்பதிவு பதிவாகியுள்ளது. தகுதியுள்ள 7,906 மாணவர்களில், சுமார் 5,500 பேர் வாக்களித்தனர்.


கடைசியாக கிடைத்த ஓட்டு எண்ணிக்கை நிலவரப்படி, தலைவர் பதவியை பா.ஜ., மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி., கைப்பற்றும் நிலையில் உள்ளது. இதன் வேட்பாளரான ஷிக்கா ஸ்வராஜ், 922 ஓட்டுகளுடன் முன்னிலையில் இருக்கிறார்.


மொத்தமுள்ள 42 கவுன்சிலர் இடங்களில் 23 இடங்களை ஏ.பி.வி.பி., வென்றுள்ளது. இது இடதுசாரி அமைப்புகளின் கோட்டையாக கருதப்பட்ட இந்த பல்கலையில் ஏ.பி.வி.பி., அடைந்த வெற்றி முக்கியமானதாக கருதப்படுகிறது.. வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது, மேலும் ஜே.என்.யு., மாணவர் சங்கத்தின் நான்கு மத்திய குழு இடங்களிலும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் தற்போது முன்னிலை வகிக்கிறது.

தலைவர் பதவிக்கு, ஏ.ஐ.எஸ்.ஏ- டி.எஸ்.எப் அணியின் நிதீஷ் குமார்-1216 வாக்குகள் பெற்று முன்னிலையிலும், ஏ.பி.வி.பி.யின் ஷிகா சுவராஜ்-1117 ஒட்டுக்கள் பெற்று சற்று பின்தங்கி இருந்தார்.


துணைத் தலைவர் பதவிக்கு, ஏ.பி.வி.பி.,யின் நிட்டு கவுதம் 958 வாக்குகளுடன் முன்னிலையில் இருந்தார்.


பொதுச் செயலாளர் பதவிக்கு குணால் ராய் 1142 வாக்குகளுடன் முன்னிலை வகித்து வருகிறார். இணைச் செயலாளர் பதவிக்கு வைபவ் மீனா 1218 வாக்குகளுடன் முன்னிலை வகித்து வருகிறார்.

பெருமளவு ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்டுள்ள நிலையில், ஏ.பி.வி.பி., போட்டியாளர்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement