தடகளத்தில் தங்கம்

மதுரை: தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் ஈரோட்டில் முதலாவது மண்டல அளவிலான தடகள போட்டிகள் நடந்தன. இதில் மதுரை ரயில்வே மைதானத்திற்குட்பட்ட ஒலிம்பிக் கோல்டு பவுண்டேஷன் சார்பில் மாரிசெல்வி 20 வயதுக்குட்பட்ட பிரிவில் பங்கேற்றார்.

இதில் 200 மீட்டர் ஓட்டப்போட்டியை 25.19 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கமும், 400 மீட்டர் ஓட்டத்தை 56.40 வினாடிகளில் கடந்து வெள்ளிப்பதக்கம் பெற்றார்.

இவரை தலைமை பயிற்சியாளர் திருஞானதுரை, பயிற்சியாளர் முத்துப்பாண்டி வாழ்த்தினர்.

Advertisement