பொது 17 வயது சிறுமி கர்ப்பம் 'போக்சோ'வில் மூவர் கைது

பெரம்பூர், புளியந்தோப்பு சரகத்தை சேர்ந்த இளம் பெண் கர்ப்பமான நிலையில், ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம்., மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார்.

அவரது ஆதார் கார்ட்டை பார்த்த போது, 17 வயது சிறுமி என்பது மருத்துவர்களுக்கு தெரியவந்தது.

இதுகுறித்து, சமூக நல அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சிறுமியிடம் விசாரித்த போது, வியாசர்பாடியைச் சேர்ந்த வசந்த்குமார், 19, என்பவரை காதலித்த நிலையில், கடந்தாண்டு பெசன்ட் நகர் சர்ச்சில் வைத்து திருமணம் செய்தது தெரிந்தது.

சிறுமிக்கு பெற்றோர் யாரும் இல்லாததால் வசந்தகுமார், அவரது தாய், சகோதரி ஆகியோர் சேர்ந்து திருமணம் செய்துள்ளனர்.

சமூக நலத்துறை அதிகாரி அளித்த புகாரில், செம்பியம் மகளிர் போலீசார், போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிந்தனர்.

வசந்தகுமார், அவரது தாய் தேவி, சகோதரி நந்தினி ஆகிய மூவரையும் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement