தி.மு.க.,வினருக்கும் அதே கதி; கொலை வழக்கில் போராட்டம்

சிவகங்கை: சிவகங்கை அருகே சாமியார்பட்டியைச் சேர்ந்த பிரவீன் குமார், 27; தி.மு.க., விளையாட்டு அணி துணை அமைப்பாளராக இருந்தார். இவர், நேற்று முன்தினம் வெட்டி கொல்லப்பட்டார்.
இக்கொலையில், அவரது உறவினரான கருணாகரன், 20, அவரது நண்பர்கள் பிரபாகரன், 19, குரு, 21, ஆகியோர் ஈடுபட்டது விசாரணையில் தெரிந்தது.
பெரியகோட்டை அருகே மாங்குடியில் பதுங்கியிருந்த அவர்களை போலீசார் விரட்டி பிடித்ததில், மூவருக்கும் கால் முறிவு ஏற்பட்டது.
இந்நிலையில், நேற்று காலை 10:00 மணிக்கு பிரவீன் குமாரின் உறவினர்கள், கொலையில் தொடர்புடைய மேலும் சிலர் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், அவர்களையும் கைது செய்ய வேண்டும் எனக்கூறி, மானாமதுரை - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை, சாமியார்பட்டி விலக்கில் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கூடுதல் எஸ்.பி., பிரான்சிஸ், டி.எஸ்.பி., அமல அட்வின், இன்ஸ்பெக்டர் அன்னராஜ் பேச்சு நடத்தினர். பின், மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
மேலும்
-
லாரி டிரைவர்களுக்கு ஆங்கிலம் பேச்சுத் திறமை வேண்டும்: அதிபர் டிரம்ப் புதிய உத்தரவு
-
பஹல்காம் சம்பவம்: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்திப்பு
-
சிகிச்சையில் சிறுத்தை மரணம்: வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை
-
சீன உணவகத்தில் தீவிபத்து: 22 பேர் பலி
-
கனடா தேர்தலில் வெற்றி: மார்க் கார்னிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
-
நாட்டின் பாதுகாப்புக்காக ஸ்பைவேரை பயன்படுத்துவதில் தவறில்லை: சுப்ரீம் கோர்ட்