கங்கைகொண்டான் தொழில் பூங்கா சூழல் அனுமதிக்கு விண்ணப்பம்

சென்னை; திருநெல்வேலியில், கங்கைகொண்டான் விரிவாக்க தொழில் பூங்காவுக்கு, சுற்றுச்சூழல் அனுமதி கோரி சிப்காட் நிறுவனம் விண்ணப்பம் செய்து உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், கங்கை கொண்டானில், சிப்காட் நிறுவனத்துக்கு, 1,992 ஏக்கரில் தொழில் பூங்கா உள்ளது. அதில், 128 ஏக்கரில் சிறப்பு பொருளாதார மண்டலம் உள்ளது. அங்கு, பல்வேறு தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன.
இங்கு தோல் அல்லாத காலணி, எலக்ட்ரானிக்ஸ் துறைகளின் முதலீட்டை தென் மாவட்டங்களுக்கு ஈர்க்கும் நடவடிக்கையில், அரசு ஈடுபட்டு உள்ளது.
எனவே, கங்கை கொண்டான் விரிவாக்க தொழில் பூங்கா, 1,660 ஏக்கரில் உருவாக்கப்பட உள்ளது.
இதற்காக நில எடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான திட்ட செலவு, 405 கோடி ரூபாய்.
கங்கை கொண்டான் விரிவாக்க தொழில் பூங்காவில் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு, சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு, சுற்றுச்சூழல் துறையிடம், சிப்காட் நிறுவனம் விண்ணப்பம் செய்து உள்ளது.
மேலும்
-
ரூ.2 ஆயிரம் கோடி ஊழல்; ஆம்ஆத்மி கட்சியின் மணிஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் மீது வழக்கு
-
பாகிஸ்தானுக்கு தண்ணீர் போகணுமா: பஞ்சாப் முதல்வரை கேட்கிறார் ஹரியானா முதல்வர்!
-
மருத்துவமனையில் நடிகர் அஜித் அட்மிட்!
-
பயங்கரவாத தாக்குதல் எதிரொலி; தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு மாற்றி அமைப்பு
-
சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்கள்: வெளியேற்றும் நடவடிக்கை தமிழகத்தில் தொடக்கம்!
-
அழகிய தமிழ்ப்பெயர்களை அறிய இணையப்பக்கம்; துவங்குகிறது தமிழக அரசு!