ஏ.டி.எம்.,மில் 100, 200 ரூபாய்: ஆர்.பி.ஐ., உத்தரவு

மும்பை : பொதுமக்களுக்கு 100, 200 ரூபாய் கரன்சி நோட்டுகள் எளிதாக கிடைக்கும் வகையில், ஏ.டி.எம்.,மில் அவை கிடைப்பதை உறுதி செய்யுமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

வங்கிகள் மட்டுமின்றி, ஒயிட் லேபிள் ஏ.டி.எம்., எனப்படும் ஏ.டி.எம்., நிறுவனங்களும் இதை படிப்படியாக அமல்படுத்த ஆர்.பி.ஐ., உத்தரவிட்டுள்ளது. அதிகம் புழக்கத்தில் இருக்கக்கூடிய 100, 200 ரூபாய் நோட்டுகளை தொடர்ந்து ஏ.டி.எம்.,மில் கிடைக்கச் செய்யுமாறும்; குறைந்தபட்சம் இந்த இரண்டு நோட்டுகளில் ஒன்றுக்காவது ஏ.டி.எம்.,க்குள் ஒரு டிரேவை இடம்பெறச் செய்யுமாறும் ஆர்.பி.ஐ., வலியுறுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் 90 சதவீத ஏ.டி.எம்.,களில் இந்த வசதியை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement