தே.மு.தி.க. பொறுப்புகளில் திடீர் மாற்றம்: பெயர் மாறி இளைஞரணி செயலாளரான விஜய பிரபாகர்

சென்னை: தே.மு.தி.க.,இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த வெள்ளிச்சந்தையில் இன்று(ஏப்.30) தே.மு.தி.க., செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் கலந்துகொள்ள தமிழகம் முழுவதும் ஏராளமான தொண்டர்கள் வருகை புரிந்தனர்.
அவர்களில் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை.
பொதுக்குழு கூட்டம் நடக்கும் திருமண மண்டபத்தின் நுழைவு வாயிலில் தடுப்புகள் வைத்து பவுன்சர்கள் தடுத்து நிறுத்தினர். பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு தங்களுக்குரிய அடையாள அட்டை பெற்ற பின் அதை காண்பித்த பின்னரே மண்டபத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
செய்தி சேகரிக்க சென்ற நிருபர்களையும் திருமண மண்டபத்திற்குள் அனுமதிக்கவில்லை. மண்டபத்தில் அருகில் அசைவ விருந்து மதியம் வழங்கப்பட உள்ள நிலையில் அங்கும் யாரையும் அனுமதிக்கவில்லை.
இந் நிலையில் தே.மு.தி.க.,இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ளார். கட்சியின் பொருளாளராக எல்.கே.சுதீஷ் நியமிக்கப்பட்டு உள்ளார். தலைமை நிலைய செயலாளராக பார்த்தசாரதி, அவை தலைவராக இளங்கோவன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
வழக்கமாக விஜய பிரபாகரன் என்றே அறிவிப்புகளில் அவரது பெயர் இடம்பெற்று இருக்கும். அவரின் சமூக வலைதளபக்கங்களிலும் இதே பெயர் தான் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
ஆனால், இன்றைய அறிவிப்பில் அப்படி இல்லாமல் விஜய பிரபாகர் என்றே விளிக்கப்பட்டு இருந்தது. மேலும், பிரேமலதாவின் கையெழுத்திட்ட கட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிலும் விஜய பிரபாகர் என்றே இருந்தது.விஜய பிரபாகரன் என்பது, விஜய பிரபாகர் என்று திருத்தம் செய்துள்ளது ஏன் என்பது தொண்டர்களுக்கு புரியாத ஒன்றாக இருக்கிறது.
மேலும்
-
மருத்துவமனையில் நடிகர் அஜித் அட்மிட்!
-
பயங்கரவாத தாக்குதல் எதிரொலி; தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு மாற்றி அமைப்பு
-
சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்கள்: வெளியேற்றும் நடவடிக்கை தமிழகத்தில் தொடக்கம்!
-
அழகிய தமிழ்ப்பெயர்களை அறிய இணையப்பக்கம்; துவங்குகிறது தமிழக அரசு!
-
எல்லையில் ட்ரோன் எதிர்ப்பு ஆயுதங்கள் தயார்; பாக்., கடத்தல் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி!
-
பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் லஷ்கர் முக்கிய புள்ளி: என்.ஐ.ஏ., விசாரணையில் உறுதி