பயங்கரவாத தாக்குதல்: மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை குழு ஆலோசனை

8


புதுடில்லி: டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக, நேற்று, டில்லியில் உள்ள பிரதமர் மோடி இல்லத்தில், உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது, ''எங்கு, எப்போது, எந்த இலக்கை தாக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்ய, ராணுவத்துக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது,'' என, பிரதமர் மோடி தெரிவித்தார்.



இந்நிலையில் இன்று (ஏப்ரல் 30) டில்லியில் பிரதமர் மோடியின் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக அமைச்சரவை குழு உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.


ராணுவ ரீதியான நடவடிக்கை குறித்து, அமைச்சரவை குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement