அமுல் பால் விலை ரூ.2 உயர்வு: இன்று முதல் அமல் ஆனது

2

புதுடில்லி: அமுல் தனது பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளது. இந்த அறிவிப்பு இன்று முதல் ( மே 1)அமலுக்கு வந்துள்ளது.

முன்னதாக மதர் டெய்ரி நிறுவனம் தனது பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியது. இது ஏப்ரல் 30ஆம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இந்நிலையில், குஜராத்தை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் அமுல் பால் நிறுவனம், பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. இது விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.

கடைசியாக கடந்த 2024-ஜூன் மாதம் பால் விலை உயர்த்தப்பட்டது.

தற்போது உயர்த்தப்பட்ட புதிய விலை உயர்வு 3 முதல் 4 சதவீதம் வரை இருக்கும்.

அமுல் கோல்டு அரை லிட்டர் பாக்கெட் இனிமேல் 34 ரூபாய்க்கும், அமுல் சக்தி (ஸ்டாண்டர்டு) அரை லிட்டர் பாக்கெட் இனி 31 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும்.

பால் உற்பத்தியாளர் சங்கங்களும் கடந்த ஓராண்டாக விவசாயப் பொருட்களின் விலையை உயர்த்தின. இவற்றை கருத்தில் கொண்டு பால் விலையை உயர்த்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement