மே தினத்தில் மதுபானம் விற்ற 19 பேர் கைது

கடலுார்: மே தினத்தையொட்டி நேற்று மதுபான கடைகளை மூட கடலுார் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இருப்பினும் இதனை மீறி மது விற்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

கடலுார் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் டி.எஸ்.பி.,பார்த்திபன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பாலாஜி, சப் இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் ஆல்பேட்டை, கும்மத்தான்மேடு, சாவடி, அழகியநத்தம் சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது புதுச்சேரியில் இருந்து மதுபானங்கள் கடத்தி வந்த 5 பேரை கைது செய்தனர்.

இதேப் போன்று, பண்ருட்டி மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையிலான போலீசார் நத்தப்பட்டு பஸ் நிறுத்தம் அருகே புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தி வந்த பரங்கிப்பேட்டை சிலம்பரசன்,30; என்பவரை கைது செய்தனர்.

விருத்தாசலம் மதுவிலக்கு அமல் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி தலைமையிலான போலீசார் 4 பேரை கைது செய்தனர். மாவட்டம் முழுதும் ஒரே நாளில் மதுபானங்கள் விற்பனை தொடர்பாக 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 19 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் இருந்து 4 லிட்டர் கள், 304 மதுபாட்டில்கள், 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement