மாருதி சுசூகி 'வேகன் ஆர்' பாதுகாப்புக்கு முக்கியத்துவம்

'மாருதி சுசூகி' நிறுவனம், அதன் 'வேகன் ஆர்' காரை மேம்படுத்தி உள்ளது. இது, இந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் ஆகும். இதன் விலை, 14,000 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த கார், 10 மாடல்களில் வருகிறது.
முந்தைய காரில், இரண்டு காற்றுபைகள் மட்டுமே இருந்தன. தற்போது பாதுகாப்பை அதிகரிக்க, ஆறு காற்று பைகள் அடிப்படை அம்சமாக வழங்கப்படுகிறது.
பின்புற பயணியருக்கு '3 - பாயின்ட் சீட் பெல்ட்' வசதி, 20 சதவீதம் எத்தனால் கலப்பு பெட்ரோலை பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்ட இன்ஜின் ஆகியவை புதிய மாற்றங்கள்.
உட்புற மற்றும் வெளிப்புற டிசைனில் எந்த மாற்றமும் இல்லை. வெளிப்புற எலக்ட்ரானிக் கண்ணாடிகள், டூயல் டோன் டேஷ்போர்டு, 7 அங்குல டச் ஸ்கிரீன், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, ஏ.பி.எஸ்., இ.பி.டி., சென்ட்ரல் லாக்கிங் வசதி மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் உள்ளன.
இந்த காரில், 1 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல், 1.2 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் மற்றும் 1 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் - சி.என்.ஜி., என மூன்று வகையான இன்ஜின்கள் உள்ளன. மேனுவல் மற்றும் 'ஏ.எம்.டி.,' என்ற ஆட்டோ கியர்பாக்ஸ்களில் இந்த கார் வருகிறது.
இன்ஜின் - 1 லிட்டர், 3 சிலிண்டர், பெட்ரோல் -சி.என்.ஜி-.,
பவர் - 56 ஹெச்.பி.,
டார்க் - 82 என்.எம்.,
மைலேஜ் - 34 கி.மீ.,
மேலும்
-
ஓராண்டில் ரூ.55 ஆயிரம் கோடிக்கு மின்சாரம் கொள்முதல்; ஒப்புதலை விட கூடுதலாக ரூ.13,179 கோடி செலவு
-
மே தினத்தில் மதுபானம் விற்ற 19 பேர் கைது
-
ஆடுகள் திருடிய 2 சிறுவர்கள் கைது
-
1,250 கிலோ ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது
-
பல்கலை., கூட்டமைப்பு 23வது நாளாக போராட்டம்
-
வான்வெளியை மூடியது பாகிஸ்தான்: ஆண்டுக்கு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.5 ஆயிரம் இழப்பு!