ஏப்ரல் மாதத்தில் கார் விற்பனை முன்னணி நிறுவனங்கள் சறுக்கல்

சென்னை:நடப்பு நிதியாண்டின் முதல் மாதமான கடந்த ஏப்ரலில், பயணியர் கார் விற்பனை 3.93 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டின் ஏப்ரலில் 3.22 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த ஏப்ரலில் 3.34 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
நாட்டின் முன்னணி கார் நிறுவனமான மாருதி நிறுவனத்தின் மொத்த விற்பனை உயர்ந்து இருந்தாலும், உள்நாட்டு விற்பனையில் பெரிய முன்னேற்றம் இல்லை. ஏற்றுமதி 25 சதவீதம் உயர்ந்துள்ளது.
டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி மீண்டும் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது மஹிந்திரா நிறுவனம். ஹூண்டாய், டாடா நிறுவனங்கள் சரிவை கண்டுள்ளன. டாடா நிறுவனத்தின் ஏற்றுமதி 233 சதவீதம் உயர்ந்து, 100 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
ஹூண்டாய் நிறுவனம் உள்நாட்டில் 90 லட்சம் கார்களை விற்பனை செய்து, புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதன் ஏற்றுமதியும் 21 சதவீதம் உயர்ந்துள்ளது.
மாருதி 1,37,952 1,38,704 0.54மஹிந்திரா 41,008 52,330 27.56டாடா 47,883 45,199 5.60 (குறைவு)ஹூண்டாய் 50,201 44,374 11.60 (குறைவு)டொயோட்டா 20,494 24,833 21.17கியா 19,968 23,623 18.29எம்.ஜி., 4,725 5,829 23.35மொத்தம் 3,22,231 3,34,892 3.93
மேலும்
-
ஓராண்டில் ரூ.55 ஆயிரம் கோடிக்கு மின்சாரம் கொள்முதல்; ஒப்புதலை விட கூடுதலாக ரூ.13,179 கோடி செலவு
-
மே தினத்தில் மதுபானம் விற்ற 19 பேர் கைது
-
ஆடுகள் திருடிய 2 சிறுவர்கள் கைது
-
1,250 கிலோ ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது
-
பல்கலை., கூட்டமைப்பு 23வது நாளாக போராட்டம்
-
வான்வெளியை மூடியது பாகிஸ்தான்: ஆண்டுக்கு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.5 ஆயிரம் இழப்பு!