காதலை ஏற்க மறுத்ததால் தாக்க வந்த இளைஞர்; சுவர் ஏறி குதித்து தப்பிய மாணவி

கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே காதலை ஏற்க மறுத்ததால், தன்னை தாக்க வந்த நபரிடம் இருந்து, இளம்பெண் ஒருவர் சுவர் ஏறி குதித்து தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கன்னியாகுமரி மாவட்டம் மந்திவிளை பகுதியைச் சேர்ந்த ஜெனிஷ்,28, என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இவர், பக்கத்து ஊரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார்.


தொலைபேசி மூலமாக மாணவியிடம் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால், அதனை மாணவி ஏற்க மறுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால், ஆத்திரத்தில் இருந்த ஜெனிஷ், இரு தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார்.


நேற்று காலை மாணவியை பின் தொடர்ந்து சென்று, அவரது வீட்டுக்குள் நுழைந்து தாக்க முயன்றுள்ளார். இதனால், அச்சமடைந்த மாணவி, பக்கத்து வீட்டின் சுற்றுச்சுவரை ஏறி குதித்து அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார். மேலும், இது தொடர்பாக மாணவி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதனிடையே, வீடு புகுந்து தன்னை தாக்க வந்த நபரிடம் இருந்து, சுவர் ஏறி குதித்து தப்பியோடிய மாணவியின் சி.சி.டி.வி., வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Advertisement