ஒரே பைக்கில் நான்கு பேர் பயணம் கண்டுகொள்ளாத போலீசாரால் அபாயம்

திருவள்ளூர்:இருசக்கர வாகனங்களில் இருவர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்ற போக்குவரத்து விதியை மீறி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் மூவர், நால்வர், ஐவர் என, இஷ்டம் போல் பயணம் செய்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
இவ்வாறு போக்குவரத்து விதிமீறி இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வோரை, காவல் துறையினர் கண்டுகொள்ளாததே காரணம் என, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், இவர்கள் தலைக்கவசமும் அணிவதில்லை.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'விதிமீறும் இருசக்கர வாகன ஓட்டிகளை பிடித்து வழக்கு பதிவு செய்யும் போது அரசியல் கட்சி, அதிகாரிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் தலையீட்டால், எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
மேலும், வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு அளித்தால், தான் இருசக்கர வாகன விபத்துகளை கட்டுப்படுத்த முடியும்' என்றனர்.
எனவே, இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
ஆன்மிகமும், தொழில்நுட்பமும் இணைந்து செயல்பட முடியும்: சைவ சித்தாந்த மாநாட்டில் ஜே.பி.நட்டா பேச்சு
-
வீட்டில் பாதுகாப்பாக வாழ முடியாத சூழல்: சீமான் கண்டனம்
-
பத்திரிகைத்துறை இல்லை என்றால் ஜனநாயகம் இறந்துவிடும்; முதல்வர் ஸ்டாலின்
-
பயங்கரவாதம் மனிதகுலத்திற்கே பெரிய அச்சுறுத்தல்; பிரதமர் மோடி பேச்சு
-
பதற்றத்தில் தடுமாறும் பாகிஸ்தான்; ஏவுகணை சோதனை நடத்தி சமாளிப்பு!
-
ராஜஸ்தானில் சட்டவிரோத குடியேற்றம்; வங்கதேசத்தினர் 6 பேர் கைது