ஹார்வர்டு பல்கலைக்கு வரி விலக்கு சலுகை ரத்து: அதிபர் டிரம்ப் உறுதி

36

வாஷிங்டன்: ஹார்வர்டு பல்கலைக்கு வழங்கப்பட்ட வரி விலக்கு சலுகையை பறிக்கப் போகிறோம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உறுதியாக தெரிவித்துள்ளார்.


அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் ஹார்வர்டு பல்கலை உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாகம் இந்த பல்கலையில் உள்ள சமத்துவம் மற்றும் பன்முக திட்டங்களை நிறுத்தும்படியும், பேராசிரியர்களுக்கான அதிகாரத்தை குறைக்கவும் வழிகாட்டுதல்களை பிறப்பித்தது. இதை ஏற்க மறுத்ததால், ஹார்வர்டு பல்கலைக்கு வழங்கப்பட்டு வந்த, 18,500 கோடி ரூபாய் நிதியுதவியை டிரம்ப் நிறுத்தினார். அதுமட்டுமின்றி வரி விதிப்போம் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்து பரபரப்பை கிளப்பினார். இது தொடர்பாக, டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக ஹார்வர்டு பல்கலைக்கழகம் வழக்கு தொடர்ந்து இருந்தது.


இந்நிலையில் இன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "ஹார்வர்டு பல்கலைக்கு வரி விலக்கு அந்தஸ்தை நாங்கள் பறிக்கப் போகிறோம். இந்த நடவடிக்கை அவர்களுக்குத் தகுதியானது!" என்று டிரம்ப் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement