லாரி - சுற்றுலா வேன் மோதி விபத்து; இத்தாலியை சேர்ந்த 2 பேர் உட்பட 7 பேர் பலி

வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள யெல்லோஸ்டோன் தேசிய பூங்காவிற்கு செல்லும் நெடுஞ்சாலையில் லாரி மற்றும் சுற்றுலா வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவில் உள்ள யெல்லோஸ்டோன் தேசிய பூங்காவிற்கு செல்லும் நெடுஞ்சாலையில், லாரி மற்றும் சுற்றுலா வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இத்தாலியைச் சேர்ந்த இரண்டு பேர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் எட்டு பேர் காயம் அடைந்தனர்.இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி மற்றும் வேன் மோதிய விபத்தில் இரண்டு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தது. லாரி ஓட்டுநர் டெக்சாஸின் ஹம்பிள் பகுதியைச் சேர்ந்த இசாய் மோரேனோ (25) என்பது விசாரணையில் தெரியவந்தது.
வாசகர் கருத்து (1)
Nada Rajan - TIRUNELVELI,இந்தியா
03 மே,2025 - 12:15 Report Abuse

0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement