சென்னையில் பா.ஜ., மையக்குழு கூட்டம்; நட்டா தலைமையில் ஆலோசனை!

சென்னை: சென்னையில் பா.ஜ., மையக்குழுக் கூட்டம் தேசிய தலைவர் நட்டா தலைமையில் நடந்தது.
தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,, பா.ஜ., ஒன்றிணைந்து போட்டியிடுகிறது. இந்த கூட்டணிக்கு அ.தி.மு.க .,தான் தலைமை என்று அறிவிக்கப்பட்டுவிட, தொடர்ந்து களப்பணிகளில் அக்கட்சி தீவிரமாக இறங்கி உள்ளது.
நேற்று நடந்த அ.தி.மு.க., செயற்குழுக் கூட்டத்தில் தி.மு.க., தான் பொது எதிரி, அதை வீழ்த்த ஒத்த கருத்துடைய கட்சிகளை திரட்டுவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந் நிலையில் பா.ஜ., தேசிய தலைவர் நட்டா தலைமையில் சென்னையில் தமிழக பா.ஜ., மையக்குழு கூட்டம் இன்று (மே 3) நடைபெற்றது. ஒருநாள் பயணமாக சென்னை வந்திருக்கும் அவர், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ஜ., பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், கே.பி. ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில், 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை எப்படி வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.












மேலும்
-
துாய்மை பணியாளருக்குசிறப்பு மருத்துவ முகாம்
-
போரூரில் குடிநீர் கிணற்றுக்கு பாதுகாப்பு மூடி அமைக்க கோரிக்கை
-
ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் இடமாற்றத்தில்முறைகேடு என மீட்புக்குழு கருத்து பதிவு
-
சாலை விபத்தில் முதியவர் உயிரிழப்பு
-
14 மையங்களில் 'நீட்' தேர்வு6,630 பேர் தேர்வெழுத தயார்
-
பாலாற்று மணலில் பதுக்கிய 101 கிலோ கஞ்சா பறிமுதல்