சாலை விபத்தில் முதியவர் உயிரிழப்பு




ப.வேலுார்:-நாமக்கல் மாவட்டம், நல்லுார் அருகே, செட்டியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வீரன், 80; விவசாயி. இவர், நேற்று முன்தினம் மாலை, செட்டியம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே, சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, பின்னால் டூவீலரில் வந்த, கரூர் மாவட்டம், ஏலுார் பகுதியை சேர்ந்த முருகேசன், 50, என்பவர், முன்னால் சென்ற வீரன் சைக்கிள் மீது மோதினார். இதில், தலையில் படுகாயமடைந்த வீரன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நல்லுார் போலீசார், விபத்துக்கு காரணமான முருகேசனை கைது செய்தனர்.

Advertisement