நள்ளிரவு 1.22 மணி முதல் 2.46 மணி வரை: ஆபரேஷன் சிந்தூர் முக்கிய தருணங்கள்

10

புதுடில்லி: ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அதன் நீட்சியாக நிமிடத்துக்கு நிமிடம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.


@1brபஹல்காம் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 நிலைகள் ஆபரேஷன் சிந்தூர் மூலம் அழிக்கப்பட்டன. இந்தியாவின் நடவடிக்கைக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.


இந் நிலையில், நள்ளிரவில் நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் பற்றிய புதிய தகவல்கள், நிமிடத்துக்கு நிமிடம் நடந்தது என்ன என்பது பற்றிய விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.


செவ்வாய்கிழமை நள்ளிரவு ( 7/5/2025);


1.22 மணி; தாக்குதலுக்கு தயாராகிவிட்டோம், வெற்றிக்கு பயிற்சி எடுத்துவிட்டோம் என்று இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில் பதிவு.


1.05 மணி முதல் 1.30 மணி வரை; பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் இந்தியா ஏவுகணை தாக்குதல். மொத்தம் 25 நிமிடம் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.


1,28 மணி முதல் 1.51 மணி வரை; பாகிஸ்தானின் பஹ்வல்புர், முசாபராபாத் மற்றும் பல பகுதிகளில் தாக்குதல்.


1.51 மணி: நீதி நிலைநாட்டப்பட்டு விட்டது, ஜெய்ஹிந்த் என்று ராணுவம் பதிவு வெளியிட்டது.


2.46 மணி; பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், எக்ஸ் வலை தளத்தில் பாரத் மாதா கீ ஜெய் என்று பதிவு.


மத்திய அரசு மற்றும் ராணுவத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு பின்னரே உலக நாடுகளுக்கு பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றிய விவரங்கள் தெரிய ஆரம்பித்தன.

Advertisement