போரூரில் குடிநீர் கிணற்றுக்கு பாதுகாப்பு மூடி அமைக்க கோரிக்கை

சித்தாமூர்:சித்தாமூர் அருகே போரூர் ஊராட்சியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
ஏரிக்கரை அருகே உள்ள குடிநீர் கிணற்றில் இருந்து மின் மோட்டார் மூலமாக மேல்நிலை தேக்கத் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, தினசரி குழாய்கள் மூலமாக கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த தண்ணீரை குடிநீராகவும், துணி துவைப்பதற்கும், குளிப்பதற்கும், பாத்திரங்கள் சுத்தம் செய்வது போன்ற வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் குடிநீர் கிணற்றில் அமைக்கப்பட்டு இருந்த மேல்தளம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இடிந்து கிணற்றில் விழுத்ததால், கிணறு தற்போது திறந்த நிலையில் காணப்படுகிறது.
இதனால் குடிநீர் கிணறு பாசி படிந்து காணப்படுகிறது. மேலும் கால்நடைகள் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழக்க வாய்ப்பு உள்ளது.
எனவே ஊராட்சி நிர்வாகத்தினர் ஆய்வு செய்து, குடிநீர் கிணற்றுக்கு பாதுகாப்பான மூடி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் எதிர்பார்கின்றனர்.
மேலும்
-
கார் இல்லாத சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்; சொத்து பட்டியலில் சுவாரஸ்யம்!
-
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் ஏன்? இந்திய ராணுவம் விளக்கம்
-
நீதிபதிகள் நியமனத்தில் நடந்தது என்ன; பொய்ப்பிரசாரத்துக்கு முடிவு கட்டியது சுப்ரீம் கோர்ட்!
-
இந்திய தாக்குதலில் 80 பயங்கரவாதிகள் காலி !
-
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 15 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படை அதிரடி
-
பஹல்காம் தாக்குதலுக்கு இதுதான் பதிலடி; உள்துறை அமைச்சர் அமித்ஷா