கரூர் பொறியியல் கல்லுாரியில்34 வது செஸ் போட்டி


கரூர்:தமிழ்நாடு செஸ் கழகம் மற்றும் கரூர் மாவட்ட செஸ் அசோசியேஷன் சார்பில், 34 வது செஸ் போட்டி, தளவாப்பாளையம் குமாரசாமி பொறியியல் கல்லுாரியில் நடந்தது.
அதில், ஆண்கள் பிரிவில் சென்னையை சேர்ந்த ஹரிதேவ், திருச்சி அஸ்வின், பெண்கள் பிரிவில் சென்னை அனன்யா ராமன், பிரணவ ஸ்ரீ ஆகியோர் வெற்றி பெற்று, தேசிய செஸ் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

தகுதி பெற்றவர்களுக்கு, கரூர் மாவட்ட செஸ் அசோசியேஷன் தலைவர் நாச்சிமுத்து பரிசு வழங்கினார்.

நிகழ்ச்சியில், துணைத்தலைவர் பாலசுப்பிரமணி, செயலாளர் செல்வராஜ், இணைச்செயலாளர்கள் சிவக்குமார், புகழேந்தி, கல்லுாரி செயல் இயக்குனர் குப்புசாமி, முதல்வர் முருகன், முதன்மை நடுவர் பழனியப்பன் உள்பட, பலர் பங்கேற்றனர்.

Advertisement