பாப்புலர் முதலியார் வாய்க்காலைதுார் வார விவசாயிகள் கோரிக்கை
கரூர்:பாப்புலர் முதலியார் வாய்க்காலை துார் வார வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டம், புஞ்சைத்தோட்டக்குறிச்சி பகுதியில், புகழூர் ராஜவாய்க்காலில் இருந்து பிரிந்து செம்படாபாளையம், தளவாப்பாளையம், மேட்டுப்பாளையம், கடம்பங்குறிச்சி என, 10 கி.மீ. தொலைவில் வாங்கல் வாய்க்காலுடன் கலக்கிறது பாப்புலர் முதலியார் வாய்க்கால். இந்த வாய்க்கால் வாயிலாக, 6,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த வாய்க்காலை பயன்படுத்தி விவசாயிகள் கோரை, வாழை, நெல் உள்ளிட்டவற்றை பயிரிடுகின்றனர். காவிரியாற்றில் நீர் திறக்கும்போது, வாய்க்காலில் தண்ணீர் சென்று கொண்டே இருக்கும். இதனை துார் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வைக்கின்றனர்.
இது தொடர்பாக விவசாயிகள் கூறியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் துார்வாரும் பணிகளுக்கு, குறிப்பிட்ட அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்தாண்டு கூட, 5.86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடக்கிறது. இப்பணிகள் முழுமையாகவும், முறையாக மேற்கொள்ளப்படுவது கிடையாது.
பல்வேறு இடங்களில் கழிவு நீரும் வாய்க்காலில் கலப்பதால், மாசடைந்து விடுகிறது. இந்த வாய்க்காலை துார் வாருவதுடன், கழிவு நீரை வாய்க்காலில் திறந்து விடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.
மேலும்
-
கார் இல்லாத சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்; சொத்து பட்டியலில் சுவாரஸ்யம்!
-
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் ஏன்? இந்திய ராணுவம் விளக்கம்
-
நீதிபதிகள் நியமனத்தில் நடந்தது என்ன; பொய்ப்பிரசாரத்துக்கு முடிவு கட்டியது சுப்ரீம் கோர்ட்!
-
இந்திய தாக்குதலில் 80 பயங்கரவாதிகள் காலி !
-
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 15 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படை அதிரடி
-
பஹல்காம் தாக்குதலுக்கு இதுதான் பதிலடி; உள்துறை அமைச்சர் அமித்ஷா