போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி பெரியார் பல்கலை அழைப்பு
ஓமலுார், மே 4
சேலம், பெரியார் பல்
கலையில் அனைத்து போட்டித்தேர்வுக்கும் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் அறிக்கை: பெரியார் பல்கலையில் குடிமையியல் பணித்தேர்வு பயிற்சி மையம் மற்றும் வழிகாட்டுதல் மையம், சேலம் மாவட்ட வேலை வாய்ப்பு மையம் இணைந்து, மே, 5(நாளை) முதல், டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பை தொடங்க உள்ளது. இதில் பெரியார் பல்கலை மாணவ, மாணவியர் மட்டுமின்றி, வெளியே இருந்து போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவியரும் பங்கேற்கலாம். திங்கள் முதல் வெள்ளி வரை, காலை, 10:00 மணிக்கு தொடங்கி, மதியம், 1:00 மணி வரை பயிற்சி வகுப்பு நடக்கும். இதற்கு பெரியார் பல்கலை நுாலகத்தில் செயல்படும், குடிமையியல் பணித்தேர்வு பயிற்சி மையம் மற்றும் வழிகாட்டுதல் மையத்தில், பெயரை பதிவு செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பெண்களுக்கு இலவச பயிற்சி
தாரமங்கலத்தில், தி செங்குந்தர் எஜிகேசன் போர்டில் செயல்படும், செங்குந்தர் கல்வியியல் கல்லுாரி சார்பில், பெண்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4, '2ஏ' பயிற்சி வகுப்பு நேற்று தொடங்கியது. போர்டு தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார். கல்லுாரி கலையரங்கில் அறிமுக வகுப்பு நடந்தது. ஆசிரியர்கள் துளசிபிரியா, சங்கர், மகாராஜன், போட்டித்தேர்வுக்கு தயாராகும் முறை குறித்து விளக்கினர். ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். பயிற்சி வகுப்பு சனி, ஞாயிறில் நடப்பதால், பெண்கள் இலவசமாக பங்கேற்று பயன்
பெறலாம் என, விழாவில்
தெரிவிக்கப்பட்டது.
மேலும்
-
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் ஏன்? இந்திய ராணுவம் விளக்கம்
-
நீதிபதிகள் நியமனத்தில் நடந்தது என்ன; பொய்ப்பிரசாரத்துக்கு முடிவு கட்டியது சுப்ரீம் கோர்ட்!
-
இந்திய தாக்குதலில் 80 பயங்கரவாதிகள் காலி !
-
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 15 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படை அதிரடி
-
பஹல்காம் தாக்குதலுக்கு இதுதான் பதிலடி; உள்துறை அமைச்சர் அமித்ஷா
-
நள்ளிரவு 1.22 மணி முதல் 2.46 மணி வரை: ஆபரேஷன் சிந்தூர் முக்கிய தருணங்கள்