தொழுநோய் பாதிப்புக்குரிய 100 பேருக்கு நலத்திட்ட உதவி

ஓமலுார்,ஓமலுார் அருகே ஆர்.சி.செட்டிப்பட்டியில் செயல்படும், தொழுநோய் நிவாரண மையத்தில் நேற்று, தொழுநோய் பாதிப்புக்கு ஆளான, 100 பேருக்கு ஊனத்தடுப்பு மருத்துவ முகாம், நலத்திட்ட உதவி வழங்கும் விழா நேற்று நடந்தது.

மைய இயக்குனர் விமல் தலைமை வகித்தார். மாவட்ட வேளாண் அலுவலர் நிறைமதி, 100 பேருக்கு சமையல் பொருட்கள், ஊனத்தடுப்பு உபகரணங்களை வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கை, கால், பாதம் பராமரிப்பு, முடநீக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நிர்வாக அலுவலர் தண்டபாணி, ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement