வள்ளலார் புதிய இல்லத்திற்கு அணையா ஜோதி இடமாற்றம்
புவனகிரி: மருதுாரில் வள்ளலார் அவதரித்த இல்லத்தில், புதிய கட்டுமான பணி துவங்க இருப்பதால், அணையா ஜோதி இடமாற்றம் செய்யப்பட்டது.
கடலுார் மாவட்டம், புவனகிரி அருகே மருதுாரில், 1823ம் ஆண்டு பிறந்தவர் வள்ளலார். அவரது இல்லத்தை நவீன வசதிகளுடன் புதிதாக கட்ட, அரசு சார்பில், 3.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
கட்டுமான பணிகள் விரைவில் துவங்கும் நிலையில், நேற்று காலை 6:00 மணி முதல் 7:30 வரை, அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் மற்றும் சன்மார்க்க கொடியேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.
முன்னாள் எம்.எல்.ஏ., ராமலிங்கம் தலைமையில், கோவில் அருகில் உள்ள தற்காலிக இடத்தில், அணையா ஜோதி இடம்மாற்றி வைக்கப்பட்டது.
அறங்காவலர் குழுத் தலைவர் அழகானந்தன், அறநிலையத்துறை நிர்வாக அலுவலர் சரவணக்குமார், அறங்காவலர் குழுவினர் கனகலட்சுமி, கனகசபை, ஸ்ரீராமலு, கிஷோர்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மேலும்
-
ஜம்மு காஷ்மீரில் ஜெயில் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி; பாதுகாப்பு அதிகரிப்பு
-
வாரத் துவக்கத்தில் தங்கம் விலை சற்று உயர்வு; ஒரு சவரன் ரூ.70,200!
-
வெறிநாய் கடித்து சிறுமி உயிரிழப்பு; தடுப்பூசி போட்டும் பயனில்லை; ஒரே மாதத்தில் 3வது சம்பவம்
-
தே.ஜ., கூட்டணியிலேயே நீடிப்பேன்; மீண்டும் மீண்டும் சொல்கிறார் நிதீஷ் குமார்
-
அக்னி நட்சத்திரம் முதல் நாளில் அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் திருவிழாவில் நடனமாடுவதில் தகராறு; கத்தியால் குத்தி சிறுவன் கொலை