கோவில் திருவிழாவில் நடனமாடுவதில் தகராறு; கத்தியால் குத்தி சிறுவன் கொலை

3

குளித்தலை: கரூரில் கோவில் திருவிழாவின் போது நடனமாடுவதில் ஏற்பட்ட பிரச்னையில், கத்தியால் குத்தி சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


குளித்தலை மாரியம்மன் கோவில் திருவிழாவின் பூச்சொரிதல் நிகழ்ச்சியின் போது, இளைஞர்கள் உள்பட அப்பகுதி மக்கள் நடனமாடி கொண்டிருந்தனர். அதில் நடனமாடிக் கொண்டிருந்த 17 வயது சிறுவன் மீது ஒருவர் விழுந்துள்ளார்.

உடனே, அவர் ஓரமாக சென்று நடனமாடுங்கள் என்று அந்த சிறுவன் கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த நபர் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து, சிறுவனை கத்தியால் குத்தியுள்ளார். இதனை தடுக்க வந்த மேலும் 2 பேரையும் கத்தியால் தாக்கியுள்ளார்.

இதில், சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மற்ற இருவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகிறது.

Advertisement